எட்டையாபுரத்தில் திமுக அரசை 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்!
கடந்த 2022-ம் ஏற்கனவே சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது திடீரென சொத்துவரி 6% உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்தும், 40 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாக காரணமாக இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் பேரூராட்சியில் எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான அதிமுகவினர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்ற முடியாமலும், மக்களின் அளிக்கும் வகையில் சொத்து வரியை உயர்வை கண்டு கொள்ளாமல் இருக்கும் தமிழக பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கண்டன கோசங்கள் எழுப்பி திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது திமுக அரசின் 6% சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அன்புராஜ்,நகர அவை தலைவர் கணபதி, மாவட்ட நிர்வாகி வேலுச்சாமி, கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி, மகளிர் அணி செல்வி,சாந்தி மற்றும் எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.