200-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் “ கொட்டும் மழையையும் ” பொருட்படுத்தாமல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!


நீதிமன்றத்திற்கும் படி திருப்பரங்குன்றம் தீபத்தூரில் தீபம் ஏற்ற அரசுக்கு வலியுறுத்தல்...



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு  விளாத்திகுளம் இந்து முன்னணியினர் கட்சி சார்பில், விளாத்திகுளம் இந்து முன்னணி வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையிலும், இந்து வழக்கறிஞர் முன்னணி மாவட்ட தலைவர் சந்தனகுமார் முன்னிலையிலும்,நீதிமன்ற தீர்ப்பின் படி திருப்பரங்குன்றம் தீபத்தூனில் தீபம் ஏற்ற அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கூறியதாவது,,, திருப்பரங்குன்றம் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு இக்கோவில் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.



ஆங்கிலேயர் ஆட்சியில் போர் நடவடிக்கை காரணமாக, மலை உச்சி தீபத்தூனில் தீபம் ஏற்ற தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது, ஆனால் அதே ஆங்கிலேய கிறிஸ்தவர் ஆட்சியில் லண்டன் ப்ரிவ்யூ கவுன்சில் இந்திகளுக்கு சாதகமாக தீர்ப்பு கூறியது.



திருப்பரங்குன்றம் மலை உரிமை பற்றியும் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டிய 1923 முதல் 2026 வரை பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொகுக்கப்பட்டன.



அனைத்து வழக்குகளிலும் தர்கா உள்ள பகுதி நீங்கலாக, மலை முழுவதும் முருகனுக்கே சொந்தம் என்றும், மலை உச்சி தீபத்தூரில் தீபம் ஏற்றலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி தீபம் ஏற்ற வழிவகை செய்திருக்க வேண்டிய முந்தைய திமுக அரசு, தீர்ப்பை மதிக்காமல் தீபம் ஏற்ற வந்தவர்கள் மீது அடக்கு முறையை கையாண்டது, முருக பக்தர்களுக்கு இளைக்கும் துரோகமாகும். 


தற்போதைய தமிழக வெற்றிக்கழக அரசும் திமுக பாதையிலேயே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது, இது முருக பக்தர்களை வஞ்சிக்கும் செயல் அல்லவா? எதற்காக இந்த நிலைபாடு? உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கொட்டு மழையையும் பொறுப்பெடுத்தாமல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் மற்றும் நெல்லை கோட்டத் தலைவர் தங்க மனோகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.