விளாத்திகுளத்தில் இல்லங்களுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்!
தமிழக முழுவதும் இன்று வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தமிழக முழுவதும் உள்ள மக்கள் பிரதிநிதிகள்அந்தந்த பகுதி நியாயவிலைக்கடை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பகுதியில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கினர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - எட்டையாபுரம் ஆற்றுப்பாலம் அருகே உள்ள நியாயவிலைக்கடை முன்பு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வாகனத்தை கொடி அசைத்து எல்லைப்பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் இல்லங்களுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கழிவு நீர் கால்வாய்களை முறையாக துப்புரவு செய்யுமாறு பேரூராட்சி ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் கூட்டுறவு சார்பதிவாளர் முருகன் கூட்டுறவு சார்பதிவாளர்கள் மகேஸ்வரன்,முருகலட்சுமி வட்டவழங்கல் அலுவலர் செல்வலட்சுமி, கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் சுபாஷ்,விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன்,கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றியசெயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் தெற்கு ஒன்றியசெயலாளர் இம்மானுவேல்,புதூர் மத்திய ஒன்றியசெயலாளர் ராதாகிருஷ்ணன்,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ்,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் வேலுச்சாமி உட்பட கழக நிர்வாகிகள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.