விளாத்திகுளம் அருகே நியாய விலைக்கடை கட்டும் பணியினை MLA மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.12.35-லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
உடன் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் வெம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி புதூர் மேற்கு ஒன்றிய பிரதிநிதி பாலமுருகன் புதூர் மேற்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேசப்பாண்டியன் புதூர் மேற்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பரமசிவம் புதூர் மேற்கு ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பிரியா கிளைச் செயலாளர் மாரிச்சாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.