விளாத்திகுளம் அருகே   ரூ.1.60- கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணியினை MLA மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில்  புதுப்பட்டி  TO தாப்பாத்தி சாலையிடையே, நெடுஞ்சாலைத்துறை சார்பில்,விரிவான சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1.60- கோடி மதிப்பீட்டில்* பாலம் கட்டும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்.

உடன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் இராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், வெளவால்தொத்தி ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா காந்தி கண்ணன், N.வேடப்பட்டி கிளைச் செயலாளர் சத்தியமூர்த்தி, புதுப்பட்டி கிளைச் செயலாளர் ஐயப்பன், வாக்குச்சாவடி முகவர் வேலுச்சாமி,  புதுப்பட்டி பவானி, ராமகிருஷ்ணன், கழக உறுப்பினர்கள் புதுப்பட்டிபாரததேவி, N.வேடப்பட்டி கண்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.