விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய வாக்காளர் சேர்க்கை முகாமை MLA மார்கண்டேயன் ஆய்வு செய்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு,திருத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பாக எண்கள்:58,59,60,61,62,63 மற்றும் சிவலார்பட்டி,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பாக எண் : 156,157 மற்றும் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பாக எண்கள் : 198,199,202, 203 புதிய வாக்காளர் சேர்க்கை முகாமில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தம் குறித்து ஆய்வு செய்தார்.