விளாத்திகுளம் அருகே என்.புதுப்பட்டி கிராமக்குளத்தை ஆய்வு செய்த MLA மார்கண்டேயன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெளவால்தொத்தி ஊராட்சி, என்.புதுப்பட்டி கிராமக்குளத்தைச்சுற்றிலும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி பயனுள்ள மரங்களை நடுமாறு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அறிவுறுத்தி ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் இராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஒன்றிய விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.