விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் மழை வெள்ள முன் ஏற்பாடுகள் குறித்து  MLA மார்க்கண்டேயன் ஆய்வு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி,5-வது வார்டு, கத்தாளம்பட்டியில் மழை வெள்ளம் முன்னேற்பாடுகள் குறித்து   விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.


உடன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், வார்டு உறுப்பினர் பிரதீபா, சமூக ஆர்வலர் வெற்றிவேல்முருகன்,விளாத்திகுளம் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.