பாலம் அமைப்பதற்கான இடத்தினை விளாத்திகுளம் MLA மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - பெருநாழி செல்லும் சாலை காடல்குடியில் புதிய சிறு பாலம் அமைப்பதற்கான இடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் ராஜபாண்டி, இளநிலை பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார், தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.