விளாத்திகுளம் அருகே ராமசந்திராபுரம் கிராமத்தில் நடைபெற்றது வரும் கட்டிட பணிகளை MLA மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியம் ராமசந்திராபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் ரூபாய்,7 லச்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பயணியர் நிழற்குடை 15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலை பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார், மேலும் பணிகளை துரிதப்படுத்துமாறு ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஏராளமானவர் உடன் இருந்தனர்.