விளாத்திகுளம் அருகே  ரூ,40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டுமான பணியினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள K.தங்கம்மாள்புரம் கிராமம் குளத்தை சுற்றிலும் ரூ.40-லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டிவரும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், மேலும் கட்டுமான பணி ஒப்பந்ததாரரிடம் சுற்றுச்சுவர் பணியை தரமாகவும், பணியை  விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.