விளாத்திகுளம் அருகே குளத்தூர் நீர்வழிப் பாதையில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை எம்எல்ஏ மார்கண்டேயன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் தெற்கு குளத்திற்கு வரும் நீர்வழிப்பாதையில் ஏற்பட்டுள்ள உடைப்பை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் பார்வையிட்டு நீர்வழிப்பாதை உடைப்பை சரி செய்வதற்கு அறிவுறுத்தினார்.
உடன் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, கிளைச் செயலாளர் R.P.முருகேசன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன்,வைப்பார் சன்னாசி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.