விளாத்திகுளம் அருகே மினி சமுதாய நலக்கூடத்தினை MLA மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அயன்வடமலாபுரம் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.15 - லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மினி சமுதாய நலக்கூடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.