விளாத்திகுளம் அருகே ரூ.50.50-லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அச்சங்குளம் கிராமத்தில் திட்டக்கூறு ஒப்படைப்பு வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.50.50-லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சேர்மன் செல்வராஜ்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.