இலவச கண் மருத்துவ முகாமினை விளாத்திகுளம்  MLA துவக்கி வைத்தார்! 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் V.வேடபட்டி கிராமம் திரு.செல்லச்சாமி நாடார் அவர்கள் நினைவாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மற்றும் அறம்செய் அறக்கட்டளை, தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாமினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்..நிகழ்வில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கற்குவேல், சமூக ஆர்வலர் இளையராஜா மாரியப்பன், ஒன்றிய தலைவர் கிருபா பெஞ்சமின் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.