விளாத்திகுளத்தில்  216 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  மேல்நிலைப்பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் 216  விலை இல்லா மிதிவண்டிகளை  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார்.



இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தவசிமுத்து, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அயன்ராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்...