விளாத்திகுளம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிய MLA மார்கண்டேயன் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காடல்குடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மேலும் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியருக்கு பொதுஅறிவு போட்டிகள் நடத்துவதற்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை நாடாளுமன்றச்செல்வி, ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியை (பொறுப்பு) மகமாயி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஆசிரிய - ஆசிரியைகள்,மாணவ - மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.