விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் 93 மாணவ மாணவிகளுக்கு இலவச விலைஇல்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பயிலும் மாணவர்கள் 48 பேருக்கும் மாணவிகள் 45 பேருக்கும் தமிழ்நாடு அரசின் விலை இல்லா மிதிவண்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கி பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி,திமுக ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தேவேந்திரன், கவுண்டன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரக்கனி காளிமுத்து,நாகலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உலகம்மா,முனியசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், தொழிலதிபர் PVSM கண்ணன்,மற்றும் ஆசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.