விளாத்திகுளத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த MLA மார்கண்டயேன்!



வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையம் தெரு பகுதி வியாபார உள்ள வியாபாரிகள், வியாபார பொதுமக்களிடம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



இந்தநிகழ்வின் போது விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஐயன்ராஜ், ஒன்றிய செயலாளர் சபாபதி, விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன்,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.