விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் MLA மார்கண்டேயன் உரையாற்றினார்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக்குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் கலந்துகொண்டு வாழ்த்தி உரையாற்றினார். 

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் செந்தில்குமார், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர்  ராதாகிருஷ்ணன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், முன்னாள் இராணுவ வீரர் சமூக ஆர்வலர் இளையராஜா மாரியப்பன், அறம்செய் அறக்கட்டளை பாரதி சங்கர்,சித்துராஜ்,சுரேஷ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஆசிரிய - ஆசிரியைகள் பழைய மாணவர்கள்,பள்ளி மாணவ - மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.