விளாத்திகுளம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் MLA மார்கண்டயேன் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்  மார்கண்டேயன் ஆய்வு செய்தார்கள்.மேலும் சுகாதார நிலையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டும் பணியினை ஆய்வு செய்து மருத்துவமனை சுற்றிலும் வேப்ப மரங்கள் நடுவதற்கு அறிவுறுத்தினார்கள்.

ஆய்வின் போது   மருத்துவர் இளவரசி ,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து ,தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் ,வேம்பார் தெற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியராஜ்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட மீனவர் அணி  துணைஅமைப்பாளர் அந்தோனிராஜ்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோமீனாமேரி,  ஒன்றிய துணை செயலாளர் புனிதா ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின் ஒன்றிய வர்த்தக அணி அருள்ராஜ், கிளை செயலாளர்கள்சேவியர், ஆதிநாரயணன், நல்லமுத்து, வன்னியராஜ்,ராஜன் ,சந்திரசேகர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.