விளாத்திகுளம் அருகே நெடுங்குளம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணியினை எம்எல்ஏ மார்க்கண்டயேன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  நெடுங்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்.

நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல்,ஒன்றிய பொறியாளர் அலெக்ஸ் ,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு,தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, ஊர் தலைவர் உலகம்முத்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பொன் மாடத்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கனகராஜ் கிளைச் செயலாளர் மாரியப்பன், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன், ஒன்றிய மாணவரணி முனியசாமி,  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.