விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயத்தினை MLA கொடியசைத்து துவக்கி வைத்தார்! 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.