புதூரில் அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்த எம்.எல்.ஏ..!
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் நிறைவடைந்த அங்கன்வாடி மையங்கள் மற்றும் மக்கள் நலத்திட்ட பணிகள் திறப்பு விழா மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜன், தினகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். அதன்படி, புதூர் பேரூராட்சிக்குட்பட்ட, 9-வது வார்டு அம்பேத்கர் தெருவில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தையும், 2-வது வார்டான குளக்கட்டான் குறிச்சி, ராஜாஜி தெருவில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தையும்,
சென்னம்பட்டி ஊராட்சியில் ரூ.31.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும் இன்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்கண்டேயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து புதூர் ஊராட்சி ஒன்றியம், மேலஅருணாச்சலபுரம் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணியினையும்,
சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவதற்கான பணியையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர், மார்கண்டேயன் அடிக்கல் நாட்டில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், புதூர் குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் சரளாதேவி, புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், புதூர் மத்திய ஒன்றிய தேர்தல் பார்வையாளர் மாரிமுத்து, பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் பச்சைமலை, மாவட்ட பிரதிநிதிகள் வேலுமணி, பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி வார்டு உறுப்பினர்கள் மாலையம்மாள், வெற்றிவேலன், தினகரன்,தங்கமுத்து, சித்ராகணேசன், வார்டு செயலாளர் நவரத்தினம், பேரூர் கழக துணைச் செயலாளர் தம்பிராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.