விளாத்திகுளம் அருகே 236-பயனாளிகளக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கான வேலை உத்தரவினை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் - குளக்கட்டான்குறிச்சி கம்மவார் திருமண மண்டபத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கான வேலை உத்தரவினை 236-பயனாளிகளுக்கு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கீதாஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினார்கள். நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.