விளாத்திகுளம் அருகே அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கீதா ஜீவன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதும்வென்றான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டுத்திருவிழாவில் மாண்புமிகு.சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுகுழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) செல்வி.ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் விழாவில் மாவட்ட கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலர் பாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்கள் பவனந்தீஸ்வரன், சாந்தி பள்ளி தலைமை ஆசிரியை பாத்திமா விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.