தமிழக முன்னாள் முதல்வரும் சிறந்த எழுத்தாளருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு தினம் தமிழக முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மாலை அணிவித்து மலர் தூவி  மரியாதை செலுத்தினார்.நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு ,விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து ,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ,ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல்  ,மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல்,ராமலிங்கம் ,ஸ்டாலின்கென்னடி,தாளமாணிக்கம்,வெங்கடேசன் கலைச்செல்வி ,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்  உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.