மீண்டும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினராக மார்கண்டயேன்!
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட விளாத்திகுளம் சிட்டிங் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் மீண்டும் தேர்தலில் 57458 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று,மூன்றாவது முறையாக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினராக விளாத்திகுளம் தொகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாவது இடத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர், காசிராம் 49578 வாக்குகள் பெற்றார்.
மூன்றாவது இடத்தில் இடத்தில் அதிமுக வேட்பாளர் சத்யா 47551 வாக்குகளும்...
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி ராமச்சந்திரன் 11574 வாக்குகளும் பெற்றனர்.
மற்ற அரசியல் கட்சியினர் குறைந்த அளவில் வாக்குகள் பெற்றனர்.