விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக மார்க்கண்டேயன்:பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகத்தில் திமுகவினர்!
தமிழக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு திமுக வேட்பாளராக தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு மீண்டும் போட்டியிட அதிகாரப்பூர்வமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன், இதற்கு முன்னதாக அதிமுக புதூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர், 2011 to 2016 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.

அதனைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து விலகி 2019 இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி,பின்னர் 2020-ல் திமுகவில் இணைந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு விளாத்திகுளம் தொகுதியில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு ஐந்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் நிலையில், தற்போது மீண்டும் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட திமுக தலைமை அறிவித்ததை தொடர்ந்து, விளாத்திகுளம் பகுதி திமுகவினர் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகத்தில் உள்ளனர்.