விளாத்திகுளத்தில் கடும் வெயிலிலும் விதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மார்கண்டயேன்!



வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மதுரை சாலையில் உள்ள வியாபாரிகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், வியாபார பொதுமக்களிடம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



இந்தநிகழ்வின் போது விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஐயன்ராஜ், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவிராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சடையாண்டி, ஒன்றிய செயலாளர் சபாபதி, கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஜோதி, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.