விளாத்திகுளம் அருகே மூதாட்டியிடம் செல்போன் திருடிய “மாவீரன்” கைது!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரம் கிராமத்தை சேர்ந்த குருபாக்கியம்(64),என்ற மூதாட்டியின் வீட்டிலிருந்த செல்போன் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி திருடு போனது, இதுகுறித்து மூதாட்டி குருபாக்கியம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனை அடுத்து செல்போனில் உள்ள IME  நம்பரை வைத்து சைபர் கிரைம் போலீசார் சோதனை செய்தபோது, அந்த செல்போன் நாகலாபுரத்தில் உள்ள ஒரு கடையில் இருந்தது தெரியவந்தது, அந்தக் கடைக்காரரிடம் இந்த செல்போனை யார் உங்களிடம் கொடுத்தார் என்று காவல்துறையினர் விசாரணை செய்தபோது, அந்த செல்போனை விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்த காசிராஜன் என்பவரின் மகன் மாவீரன் என்பவர்(34), செல்போனை திருடி வந்து நாகலாபுரத்தில் உள்ள கடையில் வந்து விற்பனை செய்து தெரியவந்தது.

மேலும் மாவீரனை விசாரணை கைது செய்த போது,மாவீரன் குறி சொல்வது உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு விபூதி அடிப்பது,போன்ற செயல்கள் செய்து வந்ததும், இதற்கு முன் குருபாக்கியத்திற்கு உடல்நிலை சரியில்லாத போது திருநீறு போட்டு சரி செய்ததாகவும் கூறப்படுகிறது, குருபாக்கியம் வீட்டிற்கு குரு பாக்கியத்திற்கு திருநீர் போட வந்த போது வீட்டை நோட்டமிட்டு செல்போனை திருடியதாக மாவீரன் கூறியுள்ளார், இதனை அடுத்த மாவீரனை கைது செய்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.