விளாத்திகுளம் அருகே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள க. சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன் (45) இவர் அப்பகுதி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது, இதனை அடுத்து அந்த 4 வயது சிறுமி தனது தாயிடம் கூறிய நிலையில், அந்த சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பாலசுப்ரமணியனை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாலசுப்ரமணியனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வாகன விபத்தில் முட்டில் இருந்து இடது கால் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யாத பதட்டமான சூழ்நிலையில், தற்போது நான்கு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மாற்றுத்திறனாளி கைதாகி இருப்பது மேலும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.