முதல்வர்ஸகண்காணிப்பில் காவல்துறையும் இல்லை டிஜிபி இல்ல, டிஜிபி கூட போட முடியல இந்த அளவுலதான் அவங்களுடைய நிர்வாகம் இருக்கிறது. ஆட்சி மாற்றம் தான் இதற்கு முடிவு - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட 12ம் வகுப்பு பள்ளி மாணவி குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்
பனிரெண்டாம் வகுப்பு மாணவி காணாமல் போனதும் அவரது பெற்றோர்கள் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது, அங்கிருந்த உதவி ஆய்வாளர் உங்க பொண்ணு யாருடையது ஓடிப்போய் இருக்கும் என்று பேசியுள்ளார்.
மறுபுறம் ஊர் மக்கள் எல்லோரும் தேடிப் பார்க்கின்றனர் ஒரு இடத்தில் ஆனால் மறுநாள் அந்த பெண் குழந்தை கடலமாக கிடைக்கிறது.
நான் கூட பல பேட்டிகளை சொன்னேன் இன்னைக்கு நிறைய துண்டு துண்டா வெட்டிட்டாங்க அப்படின்னு சொன்னா அது தவறு. அந்த குழந்தைகளுடைய உடம்புல 22 காயங்கள் இருந்தது. 22 காயங்களிலும் 14 காயங்கள் வந்து சொல்லக்கூடாத இடங்களகல் இருந்துள்ளது.
எவ்வளவு பெரிய கொடூரம் தமிழ்நாட்டல இதே மாதிரி ஒரு மோசமான ஒரு சூழ்நிலை இங்க மட்டுமல்ல சிவகங்கையிலும் இது மாதிரி நடந்துருக்கு.
காவல்துறையிட போய் முறையிட போனா காவல்துறை அதிகாரிகளே இப்படி சொன்னா இந்த குறையை யாரிடம் போய் நான் முறையிட முடியும்,தமிழ்நாட்டில காவல்துறை இருக்குதா இல்லையா என்கின்ற சூழ்நிலைக்கு மாறி போய் விட்டது.
காவல்துறை கையில் வைத்துள்ள முதலமைச்சர் நான் இந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சரை குற்றம் சாட்டுகிறேன் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. காவல்துறை அதிகாரி இங்க மட்டுமல்ல எங்க போனாலும் சரி இதுக்கு பல சம்பவங்களை நான் கோடியிட்டு காட்டி இருக்கிறேன்.
காவல்துறையிடம் முறையிட போனா பெண்களை கேவலமாக பேசும் நிலை தமிழக காவல்துறை அதிகாரிகளகடம் வழக்கமாக இருக்கிறது. நான் எல்லா காவல்துறை அதிகார சொல்லவில்லை. கீழ்மட்டத்தில் பல பேர் இந்த மாதிரி கண்காணிப்பு இல்லாமல் காவல் துறை கட்டுப்பாடு இல்லாமல் நடக்கிறார்கள்.
சம்பவம் நடந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது. இதுவரையிலும் ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவில்லை என்று சொன்னால் காவல்துறைக்கு திறமை இல்லையா? அல்ல காவல்துறைடைய கைகள் கட்டப்பட்டிருக்கிறத?
ஸ்காட்லாந்துயாடுக்கு நிறைய நிகரான காவல்துறை தமிழ்நாடு காவல்துறை இப்பொழுது அதனுடைய நிலைமை எல்லாம் தலைகளாக மாறி போய்விட்டதா?
வீட்ல பெண் பிள்ளைகள் இனிமேல் வெளியிலே எப்படி நடமாட முடியும்? ஒவ்வொரு பெண் பிள்ளைகளை வைத்திருக்கிறவர்கள் வீட்டுக்கு காலையில போயிட்டு அல்லது ஸ்கூலுக்கு போயிட்டு அல்லது காலேஜுக்கு போயிட்டு வரும்போது வருமா இல்லையாங்கிற சந்தேகம் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இன்னைக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் கஞ்சா போதை பொருட்கள் தான். அதிகமாக எல்லா கிரமங்களிலும் நடமாடுகிறது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரி கண்காணிப்பாளர் உடனடியாக இனிமேலும் அதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் குற்றவாளிகள் கண்டுபிடிக்க வேண்டும்.
இல்லையென்றால் அது இந்த நாடு வேறு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது என்பதை எடுத்து காட்டோம். அதற்கான தேர்தலும் வர இருக்கிறது. ஆட்சி மாற்றங்களும் வரவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் அதை சொல்லுகிறேன் என்று யாரும் நினைத்து கொள்ள கூடாது.
ஒவ்வொரு சிறு குழந்தைகள் ரெண்டு வயது குழந்தை முதல் 60 வயது பெண்கள் வரையிலும் இன்றைக்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகக்கூடிய ஒரு மோசமான மிருகத்தனமான நடைமுறைக்கு காரணம் அந்த கஞ்சா போதை பொருள்கள் தான்.
22 லட்சம் கிலோ கஞ்சா பிடிப்பட்டதாக செய்திகள் சொல்கிறார்கள். எப்படி இந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இவ்வளவு பெரிய மோசமான சூழ்நிலை வந்தது என்பதுதான் இன்றைக்கு மக்க அவருடைய கேள்விக்குறியா இருக்கிறது காலம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டுல இதுவரைக்கும் 8900 படுகொலைகள் நடந்துள்ளன. அதுல 1977 படுகொலைகள் வந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள். அதுல 389 பேர் வந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள். குழந்தைகளுக்கு பாலியல் குற்றங்கள்.
நான் சொன்னேனே இரண்டு வயது குழந்தைகின் உடலில கூட இரத்த காய இவ்வளவு மிருகத்தனமாக ஆகுவதற்கு காரணம் கஞ்சா போதை பொருள்கள் தான்,முதலமைச்சர் எல்லாத்தையும் மறுத்து கொள்கிறார். இன்னைக்கு அவருடைய கண்காணிப்பில் காவல்துறையும் இல்லை டிஜிபி இல்ல, டிஜிபி கூட போட முடியல இந்த அளவுலதான் அவங்களுடைய நிர்வாகம் இருக்கிறது. ஆட்சி மாற்றம் தான் இதற்கு முடிவு என்றார்.