விளாத்திகுளம் அருகே கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் மதுரை சாலையில் கடந்த 2019-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த பால்பாண்டியன் என்பவரின் மகன் வடிவேல்முருகன் (45), என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக அவரது உறவினரான ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் அற்புத செல்வம் என்ற ஸ்வின் (33) கத்தியால் குத்திகொலை செய்தார். இந்த வழக்கில் புதூர் காவல் நிலைய போலீசார் ஆஸ்வினை கைது செய்து  வழக்கு பதிவு செய்தனர்.


இந்தவழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - IIல் நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரீத்தா குற்றவாளியான அற்புத செல்வம் என்ற ஸ்வினுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபதாரம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர் முனியசாமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.