போதை இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் - எட்டயபுரத்தில் மினி மாரத்தான் போட்டி!
பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் போதை இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் பாஜக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மினி மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எட்டயபுரம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய தொடக்க நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பால கணபதி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கோவில்பட்டியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் அபினவ் முதலிடத்தை பிடித்தார். இரண்டாவது இடத்தை காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த முகேஷ் இரண்டாவது இடத்தையும், கன்னி ராஜபுரத்தை சேர்ந்த சுப்பு ராஜா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன.