விஸ்வகர்மா சமுதாய மக்கள் சார்பாக விளாத்திகுளத்தில் மாபெரும் மாட்டுவண்டி அருகே பந்தயம் சீறிப்பாய்ந்த 99 ஜோடி மாடுகள்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் விளாத்திகுளம் வட்டார  விஸ்வகர்மா சமுதாய மக்கள் சார்பாக நடைபெற்ற விஸ்வகர்மா 2-ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் தமிழ் சினிமாவின் திரைலகம் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் 115 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளத்தில்  மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது, சின்ன மாடு,பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் திருநெல்வேலி,ராமநாதபுரம்,மதுரை,சிவகங்கை,தேனி,தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 99 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, போட்டியானது மதுரை சாலையில் நடைபெற்றது, இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியினார் சார்பாக பரிசு தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு விஸ்வகர்மா சமுதாய மக்கள் சார்பாக நடைபெற்ற மாட்டு வண்டிகள் பந்தயத்தில் 116 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து புதிய வரலாற்றைப் படைத்தது, அதேபோல் இந்தாண்டும் 99 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.  



இந்நிகழ்வில் விளாத்திகுளம் சுற்றுவட்டார விஸ்வகர்மா மக்கள் மேம்பாட்டு சங்கத் தலைவர் பாலகுருநாதன் ஆச்சாரி,செயலாளர் முனியசாமி ஆச்சாரி, துணைச்செயலாளர் M.ராஜா ஆச்சாரி,துணைத் தலைவர் சிவகுமார் ஆச்சாரி,S.குமார் ஆச்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.