தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட பெரும்பாலான வார்டுகளில் கடந்த சில தினங்களாக பேரூராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் சரியான பதில் கூறவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் விளாத்திகுளத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பேரூராட்சி செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், அண்மையில் கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள் முறையற்ற முறையில் கட்டப்பட்டதாகவும் அதிகாரியிடம் முறையிட்டு அதனை சரி செய்ய கேட்டுக் கொண்டனர்.
அதுமட்டுமின்றி விளாத்திகுளம் வைப்பாறு மற்றும் பொதுப்பணித்துறை கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல், உடனடியாக அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Vilathikulam
குடிநீர் தட்டுப்பாடு : செயல் அலுவலரிடம் பொதுமக்கள் ஆவேசம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அழகு வள்ளி அம்மன் முளைப்பாரி பொங்கல் உற்சவம் திருவிளக்கு கூட்டு வழிபாடு பூஜை !
அடுத்த
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் !
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026