விளாத்திகுளம் அருகே மர்மமான முறையில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (43), கூலி தொழிலாளியான இவர் , சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த  கணேசன் படுத்த படுக்கையிலே மர்மமான முறையில் உயிரிழந்தார், கணேசன் அதிகமாக மது அருந்தியது காரணமாக உயிரிழந்ததாக  கூறப்படுகிறது. இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.