விளாத்திகுளம் அருகே தவறவிட்ட நகையை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி என்பவர் குளத்தூர் பஜார் பகுதியில் தனது இரண்டு தங்க கம்மல் மற்றும் தங்க மோதிரத்தை சிறிய மணிபர்ஸை தவற விட்டு சென்றுள்ளார்,இதனை அந்த வழியாக வந்த மேல்மாந்தை கிராமத்தை சேர்ந்த குமரய்யா என்பவரின் மகன் ராஜ்குமார் (26) என்பவர் கீழே கிடந்த மணிபர்ஸை எடுத்து பார்த்தபோது,அதில் தங்க கம்மல் மற்றும் மோதிரத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார், இதனை அடுத்து அந்த நகை ராஜேஸ்வரிக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது, இதை அடுத்து போலீசார் நகையை ராஜேஸ்வரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து நகையை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞரை பாராட்டும் விதமாக விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் மற்றும் உதவி ஆய்வாளர் முத்துராஜ் ஆகியோர் காவல் நிலையத்திற்கு நேரில் அழைத்து இனிப்பு வழங்கி பொன்னாடை போற்றி கௌரவித்தார்.