புதுடெல்லியில், 76 வது குடியரசு NCC அணிவகுப்பில் கலந்துகொண்ட விளாத்திகுளம் பகுதி மாணவிக்கு பாராட்டு!
புதுடெல்லியில், 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு NCC சார்பில் நடைபெற்ற அணிவகுப்பில் கலந்துகொண்ட, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றதொகுதி,எட்டயபுரம் தாலுகா ஆர்.வெங்கடேஷ்வரபுரம் (இராசாப்பட்டி) கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்- இளையராணி இவர்களின் புதல்வி செல்வி பிரியதர்ஷினி கலந்து கொண்டு பெருமை சேர்த்துள்ளார். சகோதரியையும் அவருடைய குடும்பத்தாரையும் கிராம பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள், அவர்களுடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.