முற்புதர்களாக காட்சியளிக்கும் காடல்குடி – புதூர்சாலை : பொதுமக்கள் அவதி: அவசரத்திற்கு 108 வாகனம் கூட செல்ல முடியாத நிலை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காடல்குடியில் இருந்து மாவிலோடை, பூதலாபுரம் வழியாக செல்லும் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி, மாவில்லோடை, என்.ஜெகவீரபுரம்,உத்தண்டாபுரம் பி.வெங்கடாசலபுரம், பூதலாபுரம் சங்கரப்பநாயக்கன்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, கந்தசாமிபுரம், பி.ஜெகவீரபுரம்,புதுச் சின்னையாபுரம், மாதலாபுரம்,எல்.வி.புரம்,துரைச்சாமிபுரம், குமாரலிங்கபுரம், மடத்துப்பட்டி, சென்னம்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காடல்குடி - புதூர் சாலையை அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர், அதேபோல் கல்லூரி வாகனங்கள்,பள்ளிவாகனங்கள்,தனியார் நிறுவன பணியாளர் வாகனங்கள்,இருசக்கர வாகனங்கள் என தினமும் இந்த சாலையின் வழியாகதான் பயணித்து வருகின்றனர்.
தற்போது இந்தச்சாலையின் இருபுறமும் சீமைகருவேல மரங்கள் இருசக்கர வாகனங்ள் எதிர்எதிரே விலக முடியாத அளவில் ஆக்கிரமித்து இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர், எனவே சாலையின் இருபுறமும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று 20-வதற்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.