ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டம் - எட்டயபுரம் மகாவி பாரதியார் நினைவு நூற்றாண்டு மகளிர் மேல்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்பதால் பாடம் எடுக்கும் மாணவர்கள்!

 

 

 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூயத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தமிழக முழுவதும் தற்செயல் விடுப்பு எடுத்தும் மாவட்டத் தலைநகரங்களில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

தற்செயல் விடுப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 30 சதவீதம் ஆசிரியர்களைக் கொண்டு மட்டும் இன்று பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. பல்வேறு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்  மட்டும் கொண்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர்.எட்டயபுரம் மகாவி பாரதியார் நினைவு நூற்றாண்டு மகளிர் மேல்பள்ளியில் போதுமான ஆசிரியர் இல்லை என்பதால் 10 வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆசிரியர்கள் வரவில்லை என்பதால் அந்த வகுப்பைச் சேர்ந்த மாணவி மற்ற மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

 இதேபோன்று வெம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 240 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் பணிக்கு வந்துள்ளதால் ஒரே ஒரு ஆசிரியரை வைத்து பள்ளிக்கூடம் நடந்து வருகிறது.

அதோபோல் விளாத்திகுளம், குளத்தூர்,நாகலாபுரம், புதூர்,வேம்பார், எட்டயபுரம் அதனை சுற்றியுள்ள பெரும்பாலான அரசு ஆரம்பப்பள்ளிகள் இன்று பணிக்கு ஆசிரியர்கள் வராததால் பள்ளி மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.