விளாத்திகுளம் அருகே தீவிர காசநோய் கண்டறியும் முகாம்! 


தூத்துக்குடி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் பேரிலோவன்பட்டி காச நோய் பிரிவு பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரையில் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. முகாமை ஆற்றங்கரை ஊராட்சி செயலர் சேகர் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு காசநோய்  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி துவக்கி வைத்தார்கள். முகாமில் முதுநிலை நிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கணேசமூர்த்தி, முதுநிலை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் செல்வரதி, சுகதாரபார்வையாளர் அமுதா, நடமாடும் மருத்துவ குழு, பேரிலோவன்பட்டி அனைத்து இடைநிலை சுகாதார பணியாளர்கள் (MLHP), சுகாதார தன்னார்வலர்கள் (Whv ), மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.