விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் வீரசோலை அதிரடியாக பணியிட மாற்றம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக கடந்த 04-02-2023 முதல் பணியாற்றி வந்த வீரசோலை, புகார் கொடுக்க வரும் பொது மக்களிடமும், தனக்கு கீழ் பணி புரியும் காவலர்களிடமும் மரியாதையின்றி நடந்து கொள்வது, ஜாதி ரீதியாக மனம் புண்படும் வகையில் பேசுவது, சரிவர பணி செய்வதில்லை, மேலதிகாரிகளின் உத்தரவை மதிப்பதில்லை என்று தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆய்வாளர் வீரசோலை அதிரடியாக திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் தான் விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளர் சுதாகர்(------------- ) புகாரில் சிக்கி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதே காவல் நிலையத்தில் ஆய்வாளர் வீரசாலையும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பற்றாக்குறை இருந்துவரும் நிலையில், தற்போது விளாத்திகுளத்தில் உதவி ஆய்வாளர் மாற்றம் செய்யப்பட்டு சில தினங்களுக்குள் காவல் ஆய்வாளர் வீரசோலையும் திருச்சிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.