ஆப்ரேட்டர்கள் நல சங்க 10-ம் ஆண்டு சாதனை விளக்க மாநாடு அழைப்பிதழை சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கினார்....  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா-விடம் தமிழ்நாடு ஹைட்ராலிக் மற்றும் எர்த் மூவர்ஸ் ஆப்ரேட்டர்கள் அழைப்பிதழ் வழங்கினர்‌.மேலும் ஆப்ரேட்டர்கள் நல சங்கம் நடத்தும் 10ஆண்டு சாதனை விளக்க மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற உள்ளது.இதற்கு வருகை தர அழைப்பு விடுக்கும் வகையில் தமிழ்நாடு ஹைட்ராலிக் மற்றும் எர்த் மூவர்ஸ் ஆப்ரேட்டர் நல சங்க தென்காசி மாவட்ட நிர்வாகிகளான தென்காசி மாவட்ட செயலாளர் ஏசையா பாண்டியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் மற்றும் சங்கரன்கோவில் நகர நிர்வாகி ஆனந்தகுமார் உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து அழைப்பிதழ்  வழங்கினார்...