விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் சமஸ்தான வெங்கடாசலபதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் எட்டப்ப மன்னர் சமஸ்தானத்திற்கு பாதிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது, சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணியளவில் கோவில் நடைதிறக்கப்பட்டு, வெங்கடாஜலபதிக்கு அபிஷேக ஆராதனை தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அலங்கார நிகழ்ச்சி நடந்தது அதனை தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி அதிகாலை 5 30 - 7.15 மணி அளவில் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமியின் ஊர்வலம் கோவிலை சுற்றி வந்தது அதனைத் தொடர்ந்து தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது,தொடர்ந்து எட்டயபுரம் சமஸ்தான மகாராஜாசந்த்ர சைதன்ய ராஜாக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் சமஸ்தான மேனேஜர் செல்வ மாரியப்பன்,மற்றும் பலர் கலந்து கொண்டனர். எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.