நடிகர் விஜய் தலைமையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சி அறிமுகக்கூட்டங்கள், நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது, கட்சிக்கான அலுவலகம், உறுப்பினர் சேர்க்கை என கட்சிப் பணிகள் மும்முரமாக கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக விளாத்திகுளம் சன்னதி தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழக வெற்றி கழகத்தில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கை, தளபதி விஜய் பயிலகம் மற்றும் தளபதி விஜய் நூலகம் திறப்பு விழாவிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர், குளத்தூர், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விளாத்திகுளம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்திற்கான கட்சி அலுவலகம் தேர்வு செய்தல், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது, உறுப்பினர் சேர்க்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் மற்றும் விளாத்திகுளம் தொகுதியில் தளபதி விஜய் நூலகம் திறப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.  மேலும் இக்கூட்டத்தில் சமீபத்தில் புதுச்சேரியில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். 

அதுமட்டுமின்றி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், நடத்திய ரசிகர்கள் மன்ற கூட்டம், கட்சியினர் அறிமுக கூட்டம் போன்ற எந்தவொரு கூட்டத்திலும், நிகழ்ச்சியிலும் தனது ரசிகர்களுக்கு விருந்து வழங்கும் பாணியை பின்பற்றி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதல் கூட்டமான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட கட்சியினருக்கு சுடச்சுட சுவையான பிரியாணி விருந்து வழங்கி தொகுதி நிர்வாகிகள் அசத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிகழ்வில் நிர்வாகிகள், பிரவீன் குமார், மணிகண்டன், அரவிந்த், சுரேந்திர், வீர நாகம்மாள்,GV ஆனந்த், மெர்சல் இசக்கி, துளசிராம், விஷ்வா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்...