விளாத்திகுளத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் புகைப்படங்களுக்கு தமிழ் புலிகள் கட்சி சார்பில் மாவட்டச்செயலாளர் எம். கணேசன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்தநிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி ஊடக செயலாளர் கருப்பு ராஜா புதூர் ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.