விளாத்திகுளத்தில், "நாடு தூற்றும் நான்காண்டு ஸ்டாலின் ஆட்சி" துண்டு பிரசுரங்களை வியாபாரிகள் & பொதுமக்களிடம் வழங்கி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்பேரில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூயின் ஆலோசனையின்படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், அதிமுகவினர், "நாடு தூற்றும் நான்காண்டு ஸ்டாலின் ஆட்சி" என்ற தலைப்பில்‌‌ திமுக அரசின் ஆட்சியில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள் புழக்கம், திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் ஊழல்கள் மற்றும் நிதி முறைகேடுகள் என்பன போன்ற ஏராளமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் நடைபெற்று வரும் அவலங்களை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கி வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் அமையும் கூட்டணிக்கு வாக்களிக்கும்படி, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.கே.பெருமாள், கழக ஒன்றிய, நகர செயலாளர்கள் பால்ராஜ், மாரிமுத்து, விளாத்திகுளம் முன்னாள் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வரதராஜப்பெருமாள், மகளிரணி சாந்தி, பிரியா உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்...