விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆதரவற்ற மாணவர்களுக்கு ரெட்டி நல சங்கம் சார்பில் பள்ளி சீருடை வழங்கப்பட்டது!
தமிழ்நாடு மாநில ரெட்டி நல சங்கத் தலைவர் உட்லண்ட்ஸ் ரவி பிறந்தநாள் முன்னிட்டு ரெட்டி நல சங்கம் சார்பாக இன்று காலை நாலாபுரத்தில் செயல்பட்டு வரும் தேனம்மாள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு காலை மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைக்கும் உணவு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் தாய், தந்தை இழந்த ஆதரவற்ற மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பள்ளி சீருடை மற்றும் இணைப்புகள் வழங்கி சங்கத்தின் மாநில தலைவர் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் மற்றும் அறம் செய் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்துகொண்டு மாணவ - மாணவிகளுக்கு பள்ளி சீருடைகளை வழங்கினார். இதில் பெத்துராஜ், ஜெயவிலாஸ் கண்ணன், கந்தசாமி, செந்தில் முருகன், ராஜகோபால் விழுப்புரம் சங்கர்ராம், மனோகரன், வழக்கறிஞர் மகேந்திரன் ராமர் ராமநாதன் விக்கி அழகர், இனியவன் ராமச்சந்திரன், கண்ணன், ராமமூர்த்தி மற்றும் அறம் செய்ய அறக்கட்டளை நிர்வாகிகள் இளையராஜா மாரியப்பன், பாரதி சங்கர், கிராம நிர்வாக அலுவலர்கள் சித்துராஜ், விமல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.